Monday, June 4, 2007

ஓர் இரவில் ஒரு கனவு!

நேற்றுத் தான் அது நடந்தது..
சட்டெனப் பார்த்தால்..
கைகளிரண்டு மட்டும் பெருத்து நீண்டு கொண்டே போகிறது
முழங்காலைக் கடக்கும் வரையில்
மனம் மகிழ்ச்சியில் தான் துள்ளிக் கொண்டிருந்தது...
அட..!?

இதென்ன பாதங்களையும் கடந்து போகிறதே இந்தப்
பாழாய்ப் போன கைகள்?
பாரம் தாங்காத தோள்கள் கெஞ்சிப்பார்த்தும் பயனில்லை..
பூமியைக் குடைந்து வெள்ளை மாளிகையில் தான் எட்டிப் பார்க்குமோ!?

தோழன் ஒருவனின் கைக் கோடாரி தான்
பெருத்து வளரும் என் கைகளினின்று என்னை விடுதலை செய்தது
வியர்த்து விழித்துப் பார்த்தேன்...
கூரையின் பொத்தல்களூடாய் சந்திரன் கேலியாய்ச் சிரிக்கிறான்..
வெளியே
பெருத்த ஓசையுடன் கடந்து போகிறதொரு
படகுக் கார்..

1 comments:

said...

இவ்வளவு நாள் நல்லாத்தானே எழுதினீங்க!

என்ன ஆச்சு! எனக்கு சத்தியமா புரியலீங்க!

உங்களை என் ஹிட் லிஸ்டல சேர்க்க வைச்சுராதீங்க ப்ளீஸ்!