அசுர குணம் கண்டு நடுங்கும்
'தேவ' குணத்தோரே
தேவாசுர யுத்தத்தின் போக்கில் கருங்காலிகளின்
வாள் எங்கே திரும்பும் என்று தெரியுமெமக்கு
திருவரங்கத்தில் ஈரோட்டுக் கிழவனின்
மானம் காக்க தெருவிலிறங்காத
உமது குணம்..
எமது மக்களின் வாழ்வை கூவிக் கூவி
அமெரிக்க வெள்ளைப் பார்ப்பனனுக்கு விற்கும்
உமது குணம்..
எமது தேசத்தின் வளங்களனைத்தையும்
அந்நியனுக்கு அடகு வைக்கும்
உமது குணம்...
'தேவ'குணம் தானென்று
நாம் உணர்ந்தேயுள்ளோம்
அங்கே உடைந்தது சிலையின்
தலை மட்டுமல்ல
உமது மஞ்சள் பிம்பமும் சேர்ந்தே தான்...
கல்லக்குடி நினைவுகள்
கனவாய் கரைந்தோடி யுகங்கள் போயின
இன்னுமெதற்கு அந்த மஞ்சள் திரை?
கிழித்து எரியுங்களதை
நீங்கள் அம்மணமாய் நிற்பதை உலகு பார்க்கட்டும்
எமது சூத்திரப் பட்டம் போக்க
மூத்திரப் பையை கையில் சுமந்து
தெருவில் அலைந்த பெரியார் எங்கே.,
தேசத்தை விபச்சாரத்துக்கு அமெரிக்கனுக்கு
தாரை வார்க்கும் நீ எங்கே?
ஆம்! எமக்கு அசுர குணம் தான்!
தேவகுணம் கொண்ட சொறி நாய்களே
வாரும் மோதிப் பார்த்து விடுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தோழரே,
உணர்ச்சி பெருக்கெடுக்க தோள்கள் திணவெடுக்க, கண்கள் சிவக்க என் அசுர குணம் அதன உச்சத்தில் நின்று கொண்டு, பெரியாரின் பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஓலமிடும் துரோகிகளை தேடுகிறது... இது தேவ அசுர யுத்தத்தின் இறுதிச்சுற்று என்றோம் நாம், துரோகிகளோ இது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய அசுர குணம் என்கிறார்கள், ஆம் அசுர குணம்தான் எந்த அடக்குமுறைக்கும் அடிபனியாத அசுரகுணம் எதிரியின் பக்கம் எவன் நின்று பேசினாலும் மோதியழிக்கும் அசுர குணம், மோதி பார்ப்போம் துரோகிகளே, கருப்பு பார்ப்பனர்களே பெரியாருக்கு பின்னால் ஒளிந்து கொண்டு அவர் முதுகின் மீது வாள் வீசும் உங்களை இனியும் விட்டு வைக்கமுடியாது...
ஸ்டாலின்
நெருப்பாய்த் தெறிக்கும் வார்த்தைகள்...
அற்புதம்!
Post a Comment