கண்களில் நுழையும் காட்சிகள்
மூளையில் விழுகிறது ஆனால்
மனமோ இறுக மூடிக் கிடக்கிறது...
வாக்குத் தவறும் வானத்திடமும்
விளைந்ததை வாங்கத் தவறும் அரசுடன்
மாரடித்து எனக்குச் சோரிட்டவன்
வாசனையால் வயிறு நிறப்புகிறான்...
வெட்கமில்லாமல் வெளியேறுகிறது
புளியேப்பம் - என்னிடமிருந்து
போதையில் செறுகும் கண்களில்
கண்ணீர் கூட வற்றிப் போய் விட்டதோ..
தாமதமாகத் தேடுகிறேன் சிகிச்சையை.
Sunday, March 4, 2007
Subscribe to:
Posts (Atom)