Friday, June 22, 2007

கனவுகளில் இடறும் மீட்பன்!

நிறையாத வயிறுகளின்
திமிறிக் கிளம்பும் கோபம்..
மடைமாற்றக் கிளம்பி வந்தான்
பரட்டையன்...
வறண்ட வாழ்க்கையின் கனவுகளில் மட்டும் இடறும்
மேக்கப் போட்ட மீட்பன் -
மேக்கப் செல்வு 90 கோடி!

செறிக்காத சிக்கன் பிரியானியின்
அவஸ்தையோடு உள்ளே நெளியும்
கேள்விகளுக்கும்
வெறிக்கும் விழிகளைப் பார்த்து
வியர்க்கும் முகங்களுக்கும்
ஏசி அரங்கினுள் ஆறுதல் தந்தான் சிவாஜியாய்

காலி வயிற்றில் பொங்கும் அமிலத்தை
நீரூற்றித் தனிக்கும் சிவாஜி...
பாராட்டில் தெரியுது மாமியின், மு.கவின்
நிம்மதிப் பெருமூச்சு!

பனையின் நிழல் போல் தான்
இந்தப் பரதேசி தரும் ஆறுதலும்..
உச்சி வேளையில் மீண்டும்..
வெடித்துக் கிளம்பும் கோபம்!
அப்போது அதிரும் அவர்கள் அஸ்திவாரம்!

3 comments:

said...

இந்த கூட்டத்தின் முதலாலித்துவ முகத்தை அம்பலப்படுத்த யாரும் முன் வருவதில்லை அதனால்தான் சுரண்டிக் கொலுத்துக் கொண்டிருக்கிறது இந்த கும்பல் எந்த தடயுமின்றி.ஒரு முதலாலிக்கு குறைந்தது 5 அல்ல்து 10 வருடங்கள் தேவை தொழிலாலியின் உழைப்பை சுரண்ட.என்னதான் கயமைதனம் செய்தாலும் அவனது வளர்ச்சி வேகம் இவர்களை விட குறைவுதான் மக்களை சுரண்டுவதில்,இந்த போதையில் இருந்து சமூகம் மீட்க்கப்படுவது உடனடி தேவையாகும்

அரங்கு நிறைந்த கூட்டம்
ஏகாதிபத்தியம் எதிர்த்து
எங்கள் கதாநாயகன் கூட
குரல் கொடுத்தான்

இடைவேளை

விற்ப்பனையில்
கோக்,பெப்சியுடன்
கம்யூனிசமும்