Monday, May 28, 2007

வருமை ஒளிக்கப் படுகிறது!

முன் குறிப்பு : - தலைப்பில் எழுத்துப் பிழை இல்லை!

வருமைக் கோடு என்பது குறைந்த பட்ச வருமானத்தைக் கொண்டு வருமையை அளவிடும் முறை என்று சொல்லலாம்..ஆனால் நமது நாட்டில் வருமைக்கோடு அவ்வாறு தீர்மானிக்கப் படுவதில்லை. மாறாக நமது அரசு நிர்னயித்துள்ள வருமைக் கோட்டை பட்டினிக் கோடு என்று அழைப்பது சரியாகஇருக்கும்.

வருமைக் கோட்டை எப்படி தீர்மானித்தார்கள் என்பதற்கு ஒரு நீண்ட கதை உண்டு.. எனினும் அதைப் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையானது இதனடிப்படையில் வருமை ஒழிப்பைப் பற்றிய பிரஸ்தாபங்கள் எந்தளவுக்கு ஏமாற்று வித்தையாக இருக்கிறது என்பதை நமக்குத் தெளிவாகப் புரியவைக்கும். பொதுவாக இந்தியாவில் வருமைக் கோடு என்பது கலோரிகளின் அடிப்படையில் வரையறுக்கப் பட்டு வருகிறது. ஒரு மனிதன், நாளொன்றுக்கு 650 கிராம்கள் உணவு தானியத்தை வாங்கும் அளவுக்கு சம்பாதிப்பானாகில், அவனை வருமைக் கோட்டுக்கு மேல் உள்ளவன் என்று தீர்மானிக்கிறார்கள். 2005ம் ஆண்டுக் கணக்கில் இந்தளவிலான தானியத்தை ஒருவன் நகர்புறத்தில் வாங்க 559 ரூபாயும் கிராமப்புறத்தில் 368 ரூபாயும் செலவாகிறது.. இன்றய கணக்கிற்கு இது சற்றே ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம்..

இதன் அடிப்படையிலேயே இந்தியாவில் எப்படி வருமை 'ஒழிந்தது' என்பதை கீழே உள்ள அட்டவனை நமக்கு தெளிவாக்குகிறது..













இந்த கண்க்கீடுகளின் படியே பார்த்தாலும் கூட இன்று நம்மைச் சுற்றி உள்ள இந்தியர்களில் நான்கில் ஒருவன் பட்டினியால் வாடும் மனிதன் என்பது சுடும் உண்மை!

மேலும் இந்த 559 ரூபாய் எதற்குக் காணும்? இதை வைத்துக் கொண்டு ஒரு நகரத்தில் வாழும் மனிதன் என்ன செய்ய முடியும்? ஒரு மனிதன் தான் சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் உணவுக்கே செலவிடப் போவதில்லை. வசிப்பிடம், உடைகள், போக்குவரத்து, மருத்துவச் செலவுகள், குழந்தைகளின்கல்வி என்று அத்தியாவசியச் செலவுகள் எத்தனையோ உண்டு.. இது போன்ற சமூகச் செலவினங்கள் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தான் இந்தியாவில் வருமைக் கோடு நிர்னயிக்கப் பட்டுள்ளது. நகரத்தின் போக்குவரத்து சந்திப்புகளில் நாம் காணும் பிச்சைக் காரர்கள் கூட ஏறக்குறையஇதே அளவுக்கு 'சம்பாதிப்பவர்கள்' தான்.. எனில் நியாயமாகப் பார்த்தால் இன்று இந்தியாவில் வருமைக் கோட்டிற்குக் கீழ் எவருமே இருக்க வாய்ப்பில்லை!

இந்த மோசடித்தனமான அளவீடுகளைக் கொண்டு தான் இன்று வருமை ஒழிந்து போய் விட்டதாக அதிகார வர்கத்திலிருந்து, வெகுஜன ஊடகங்கள்வரையில் எல்லோரும் இந்தியாவில் வருமை ஒழிந்து வருகிறது என்கிற பாட்டை தவறாமல் பாடி வருகிறார்கள்..

இந்த வகையிலான அளவிடுதலில் மூன்று முக்கிய குறைபாடுகள் உள்ளது,

1) வருமைக் கோட்டிற்கு மேல் உள்ளதாகக் கருதப் படும் மக்களும் கூட சரியான அளவு கலோரிகளை உட்கொள்வதில்லை ( நன்றாக தின்று கொழுத்துவிட்டு எடையைக் குறைக்க மார்னிங் வாக்கும், டயட்டிங்கும் செய்யும் அலுக்கோசுக் கூட்டத்தாரைக் குறிப்பிடவில்லை ) 1981ம் ஆண்டிலிருந்து விவசாய உற்பத்தி அதிகரித்திருக்கும் போதும், தனிநபருக்கான உணவு தானியம் கிடைக்கும் சதவீதமோ அதே அளவில் தான் உள்ளது. அதே நேரம் பருப்பு வகைகளின் தனிநபருக்கான நுகர்வு அளவு 1981ம் ஆண்டு 37.5 கிராமில் இருந்தது 2003ம் ஆண்டு வாக்கில் 28.2 கிராமாக குறைந்துள்ளது..

கிராமப்புறங்களில் வருமைக்கோட்டிற்கு சற்று மேலே இருப்பவர்களில் 22 சதவீதமும் நகர்புறங்களில் 9 சதவீதம் பேரும் ஊட்டச்சத்துகுறைவாகவே உட்கொள்கிறார்கள்.. ( அபீஷியலாக நகர்புறத்தில் 2400 கலோரியும் கிராமப்புறத்தில் 2100 கலோரியும் குறைந்தபட்ச அளவாகநிர்னயிக்கப் பட்டுள்ளது )

இது பற்றிய ஒரு அட்டவனை -












2) கலோரி அடிப்படையில் வருமைக் கோட்டை நிர்னயம் செய்வது நிலமையைத் தெளிவாக காட்டாது என்பது ஒரு புறம் இருக்க, அப்படி நிர்னயிக்கப்பட்ட அளவுகளும் சரியானதல்ல. மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் ( The Indian Council of Medical Research ) கடுமையாக உழைக்கும் ஆண்களுக்கு 3800 கலோரியும் பெண்களுக்கு 2925 கலோரியையும் பரிந்துரை செய்கிறது. நமது கிராமப்புறங்களில் கடுமையானகூலித் தொழிலில் ஈடுபடும் உழைக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்கனவே நிர்னயிக்கப்பட்டுள்ள அளவுகளை விட குறைவான அளவுகளையே உட்கொண்டு வருகிறார்கள்..

ஐந்து வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 47% பேர் ஊட்ட்ச்சத்து குறைபாடுள்ளவர்கள்.. யுனிசெப்-இன்(UNICEF) அறிக்கை ஒன்றின் படி உலகில் உள்ள மூன்று ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளில் ஒன்று இந்தியக் குழந்தை என்பது வெளிப்பட்டுள்ளது..

3) ஏற்கனவே சொன்னபடி இப்போதைய வருமைக்கோடு பற்றிய அளவு முறை, உணவுத் தேவையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது.. மற்றைய அத்தியாவசியத் தேவைகளான வசிப்பிடம், மருத்துவச் செலவுகள், உடை, போக்குவரத்துச் செலவுகள் ( விவசாயம் பொய்த்துப் போன கிராமப்புறங்களில்இருந்து அருகில் உள்ள சிறு நகரங்களுக்கு கூலி வேலைகளுக்கு வரும் ஒரு நபர் குறைந்தது 10 ரூபாய்கள் போக்குவரத்துக்கு செலவிட வேண்டி இருக்கும்) இப்படி உணவு தவிர்த்து வேறெந்த செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இந்த அளவு முறை மோசடியானதல்லாமல் வேறில்லை..

ஆக, இந்தியவின் வளர்ச்சி பற்றிய கதைகளும், வல்லரசுக் கனவுகளும் வெறும் கானல் நீரைப் போன்ற ஒன்று தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஒருத்தர் இங்கே கனவு கண்டால் எல்லாம் சரியாகி விடும் என்கிறாரே..!! நிலாவுக்கு ராக்கெட்டு பறக்கும் கனவுகளோ, பாக்கிஸ்தானை போரில் வெல்லும் கனவுகளோ அல்ல - இங்கே பலருக்கு அடுப்படியில் உலை கொதிப்பது போன்று தான் கனவு வரும் சாத்தியம் அதிகம்.. ஆனால் அது கனவாகவே முடிந்து விடக்கூடிய நிதர்சனம் தான் நெஞ்சில் வலியைத் தருகிறது

ஜி.டி.பி போன்ற 'செங்குத்தாக உயரும்' புள்ளிகளிலும் இதற்கு சற்றும் சளைக்காத அளவுக்கு மோசடித்தனம் இருக்கிறது... வாய்ப்பிருப்பின் அதைப் பற்றியும் எழுதுவோம்..

நன்றி..

5 comments:

said...

அருமையான அலசல் தோழரே.உங்களது ஜிடிபி பற்றிய பதிவினை ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளேன்.

said...

நன்பர் மதுசூதனன் அவர்களின் கருத்துக்கும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கும் நன்றி!

நமது நாட்டில் என்றில்லாமல் பொதுவாகவே மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்படும் வளரும் நாடுகளில் வெளியிடப்படும் பொருளாதார முன்னறிவிப்புகள் ( Economic Forecast ) கடுமையான உள்நோக்கங்கள் கொண்டதாகவே இருக்கிறது..

இப்போது நாடுகளை அடிமைப்படுத்த இராணுவம் அல்லாமல் நிதிமேலான்மையே பயன்படுத்தப்படுகிறது என்று சொல்பவர்களின் கூற்றில் உண்மையில்லாமல் இல்லை!

said...

புரியாத புள்ளிவிவர கண்க்குகளில் பேசி இந்தியா முன்னேறுது என சிலர் - திரிகின்ற நிலையில் உங்கள் வருமை கோட்டு அலசல் வந்திருப்பது சிறப்பானது.

குரல்கள் ஒலிக்கட்டும்

said...

மிக அவசியமான, அதிகாரத்தை கேள்வி கேட்கும் உங்கள் குரல் உரத்து ஒலிக்கட்டும் தோழர். மிகச்சிறந்த கட்டுரைக்கு நன்றி..!

said...

//முன் குறிப்பு : - தலைப்பில் எழுத்துப் பிழை இல்லை!//

என்னால் அவ்வளவு உறுதியாகக் கூற முடியவில்லை. முதலில், வருமை என்று எனக்குத் தெரிந்து எந்தவொரு சொல்லும் கிடையாது. ஆங்கிலத்தில் poverty என்பதைத்தான் நீங்கள் குறிப்பிட விரும்புகிறீர்கள் என்றால் அது வறுமை என்றே இருக்க வேண்டும்.

மேலும், 'ஒழிக்கப் படுகிறது' என்பதைப் போல் ஒளிக்கப் படுகிறது என்று கூறுவதும் தவறே. ஒளித்தல் என்று எந்த சொல்லும் கிடையாது. ஒளித்து வைத்தல் என்பதே சரியான வடிவம். ஆகவே, தலைப்பில் இரு பிழைகள் உள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :)