Thursday, April 19, 2007

குரல்களின் அறிமுகம்

இது குரல்களின் பதிவு.
நிராகரிக்கப்பட்ட குரல்களின் பதிவு.
நசுக்கப்பட்ட குரல்வளைகளின் ஊடாய் ஒலிக்கும்
சங்கீதம்..

இந்தக் குரல்களில் தேனின் இனிமை இல்லாதிருக்கலாம்.
வெற்றியின் களிப்பை இந்தக் குரல்களில்
நீங்கள் காணமாட்டீர்கள்...!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒலிக்கும்
கீர்த்தனைகளுக்கெதிரான கலகக் குரல்கள் இது..
சந்தங்களைத் தேடும் நன்பர்களே
மன்னித்துக் கொள்ளுங்கள்...
இங்கே இடியோசை மட்டுமே கேட்கும்

1 comments:

said...

//இது குரல்களின் பதிவு.
நிராகரிக்கப்பட்ட குரல்களின் பதிவு.
நசுக்கப்பட்ட குரல்வளைகளின் ஊடாய் ஒலிக்கும்
சங்கீதம்..

இந்தக் குரல்களில் தேனின் இனிமை இல்லாதிருக்கலாம்.
வெற்றியின் களிப்பை இந்தக் குரல்களில்
நீங்கள் காணமாட்டீர்கள்...!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒலிக்கும்
கீர்த்தனைகளுக்கெதிரான கலகக் குரல்கள் இது..
சந்தங்களைத் தேடும் நன்பர்களே
மன்னித்துக் கொள்ளுங்கள்...
இங்கே இடியோசை மட்டுமே கேட்கும்//


அது வசந்தத்தின் இடி முழக்கமாய், எதிரிகளின் காதை செவிடாக்கும் விடுதலை கோசமாய் இருக்க வாழ்த்துக்கள்.

அசுரன்