Thursday, April 19, 2007

வெட்கமாய் இருக்கிறது…!

வெட்கமாய் இருக்கிறது…!

அதோ தெரிகிறது விடியலின்
வெளிச்சம்
இருளின் கருமைக்குப் பழகிய
கண்கள்
கொஞ்சம் கூசத்தான் செய்கிறது…

புது உலகின் வாசல்
திறந்தே கிடக்கிறது
நரகலின் இளஞ்சூட்டில் இதம் கண்ட
கால்களோ நகர மறுக்கிறது…

திசை மாறிய புது உலகக் காற்று
ஒரு கணத்தில்
தலைமயிரைக் கலைத்துக் கடந்து போகிறது..
இது சுகந்தமா முடை நாற்றமா…?
குழம்புகிறது நாசி..
புது உலகை விரும்பும் ஒரு நான்
ஏளனமாய்ப் பார்க்கிறான்..
எனக்கு வெட்கமாய் இருக்கிறது

0 comments: