நன்பனொருவன் சொன்னான் -
"தியானம் மௌனம் தரும்
மௌனம் மோட்சம் தரும்"
மௌனம் தேடிய என் நெடும் பயனம்
அன்றே தொடங்கியது
கண்களை மூடி அமர்ந்தேன்..
காதுகளில் இடியாய் இறங்கிய
சொட்டும் வியர்வையின் சப்தம்..
புயலின் ரீங்காரமாய் வீசிய
ஏக்கப் பெருமூச்சுகள்..
மனதைக் குடையும்
ஊமை விசும்பகள்...
காதுகளின் துவாரமெங்கும் சப்தங்கள்
ஈட்டியாய் துளைத்தது...
எனக்குப் புரிந்தது -
நான் தோற்று விட்டேன்!
மௌனத்தின் மேலான காதல்
தோற்ற பின் தான் தெரிந்தது
இது சப்தங்களின் உலகம் என்று..
இன்று வென்றவர்களின் சப்தங்கள்
அதிகாரத்தில்..
தோற்றவர்களோ காத்திருக்கிறார்கள்..
ஏக்கப் பெருமூச்சுகளும் ஊமை விசும்பல்களும்
காத்திருக்கின்றன..
தங்கள் தருனத்திற்காய்....
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
மெளனம் தீர்வல்ல என்பதை பறையறைந்து சொல்கிறீர்
புரச்சிகர கவியே தொடரும் நும் கவியை
சேற்றிடை சிக்கிய சின்ன பூக்களுக்காய்
இருக்கட்டும் உம் பாட்டு
சிங்கார மாளிகைகளை கேலிசெய்து
சிரிக்கட்டும் கேட்டு !
Post a Comment